செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தொடக்க நாளன்று பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
44வது ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் வீராங்கனைகள் வர உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வரவிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.