1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (14:27 IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

இந்த கல்வியாண்டில் பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடக்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருச்சியில் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. இந்த ஆலோசனையில் தமிழகம் உள்பட அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு நடத்துவது என்றும் முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் திருச்சியில் என்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் அவர்கள் பிளஸ் டூ பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும் என்று கொரோனா சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்