பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - 91.3 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகி, அதில் 91.3 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேர்வின் முடிவில் 91.3 அதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் 94.6 சதவீதம் மாணவிகளும் 87.4 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 97.3 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், 96.4 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 96.2 சதவீதம் பெற்று கோவை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறையின் இணைய தளங்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.