1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (07:20 IST)

பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரையை அடுத்து பிளாஸ்டிக் இட்லி? சென்னையில் அதிர்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கைரை விற்பனை ஆவதாக கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் நடத்தப்பட்டு வரும் சிறு ஓட்டல்களில் பிளாஸ்டிக் இட்லி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.



 


அதாவது இட்லி ஊற்றும் தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பரை போட்டு இட்லி தயார் செய்வதை கண்டுபிடித்த சுகாதார துறை அதிகாரிகள் அந்த ஓட்டல்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்று அதிரடிரெய்டு செத சுகாதாரத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பேப்பரில் உள்ள கெமிக்கல் இட்லியுடன் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், பிளாஸ்டிக் பேப்பரால் இட்லி தயார் செய்யக்கூடாது என்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர்