1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:43 IST)

ஒரே நேரத்தில் கடற்கொள்ளையர்கள், இலங்கை கடற்படை தாக்குதல்: தமிழக மீனவர்கள் அதிர்ச்சி..!

TN Fishermen
ஒரே நேரத்தில் ஒரு பக்கம் கடற்கொள்ளையர்கள் இன்னொரு பக்கம் இளைஞர் கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது  
 
கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருகின்றனர் என்பதும் இதற்கு நிரந்தர தீர்வு காண மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில்  நேற்று ஒரே நாளில் இலங்கை கடற்படையினர் மற்றும்  கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாகை மாணவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அடுத்து  மீனவர்கள்  அதிர்ச்சி அடைந்து திரும்பியதாகவும் தெரிகிறது. 
 
இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கி விரட்டி அடித்தது.  ஒரே நாளில் கடற்கொள்ளையர்களும் ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையும் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva