திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (13:02 IST)

கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு- புதிய கோயிலை கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு

thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம்  செய்வதில் பட்டியலின வகுப்பினருக்கும் மற்றொரு வகுப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தது.

இந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் மற்றும்  வேலூர் சரக  காவல்துறை தலைவர் முத்துசாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பட்டியலின சமுதாய மக்கள் கோவிலில் பாதுகாப்புடன் வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.