செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (11:44 IST)

ஜெயலலிதா சமாதியில் குண்டு வீசுவேன்! – மிரட்டிய மாற்றுத்திறனாளியால் பரபரப்பு!

சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மாற்றுதிறனாளி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பிரசாத் என்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை கொறுக்குபேட்டையை சேர்ந்த பிரசாத் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தில் பெட்ரோல் குண்டு வீச போவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.