திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (07:28 IST)

இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: பொதுமக்கள் அதிருப்தி!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும் டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 89 ரூபாய் 70 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் இன்றைய டீசல் விலை 82 ரூபாய் 66 என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகளும் டீசல் விலை 33 காசுகளும் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டு வந்தாலும் இந்தியாவில் மட்டும் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது