திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:17 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

PETROL
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 270 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள்  கொண்டுவர தயார் என்றும் அதற்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார். 
 
இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63.  எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனை ஆக்கி வருகிறது
 
Edited by Siva