வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (07:36 IST)

50 நாட்களாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை!

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
உத்தரபிரதேசம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதை அடுத்து பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது மத்திய அரசின் உள்நோக்கம் கொண்ட செயல் என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40
சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43