வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (07:56 IST)

மீண்டும் ரூ.100 ஐ தொட்டது பெட்ரோல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு வருவதை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதும் டீசல் விலை 95 ரூபாயைத் தாண்டிவிட்டது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பெற்றோர் ரூபாய் 100 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து உள்ளது எடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூபாய் 100.01 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
அதே போல் டீசல் விலை 29 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 95.31 என்று விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில் தமிழக அரசின் வரி குறைப்பால் நூறு ரூபாயை விட குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 100 ரூபாயை தாண்டியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.