வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (17:45 IST)

தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் - சத்யராஜ்

திரைத்துறையினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட சத்யராஜ், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் எனக் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என்றார்.
 
அதன்படி இன்று காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அறவழிப் போராட்டம் தொடங்கியது.
 
நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். மதியம் 1 மணியளவில் திரைத்துறையினர் நடத்திய அறவழிப் போராட்டம் நிறைவுபெற்றது. 
 
இதனையடுத்து நடிகர் சத்யராஜ் பேசும்போது, நான் எப்போதும் தமிழர்கள் பக்கம், எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டேன் என்றார். தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நில்லுங்கள். குரல் கொடுக்காதவர்கள், தமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் என்றார். மேலும் இயற்கை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம் என ஆவேசமாக பேசினார்.