வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (09:02 IST)

ஊரே மூழ்கிய கனமழை … கழுத்தளவு தண்ணீரில் சவ ஊர்வலம் – அரியலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் !

அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி எனும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துவிட அவரைக் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி மக்கள் கொண்டுசென்று அடக்கம் செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்துக்கு அருகில் கழுவந்தோண்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் இந்த கிராமமே தண்ணிரில் மூழ்கியுள்ளது. இதனால் இந்த ஊர் வெளியூர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரில் வசித்து வந்த கோசலம் என்ற மூதாட்டி உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது பினத்தை அடக்க பிண ஊர்தி வண்டிகள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

மயானத்துக்கு செல்லும் ஏரியின் கரை முழுவதும் நீர் நிரம்பியதாலும் கழுத்தளவு தண்ணீர் பாதையை மறைத்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் உறவினர்கள் தண்ணீரில் நடந்து சென்றே சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.