1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (13:10 IST)

எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் திரண்ட ஆச்சரியம்.. கோவையில் பரபரப்பு..!

பொதுவாக எம்.எல்.எம். நிறுவனத்திற்கு எதிராக தான்  மக்கள் பொங்கி எழுவார்கள். ஆனால் கோவையில் எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் திரண்டு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கோவையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்ற நூதன எம்.எல்.எம். மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர். 
 
ஆனால் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த போது மக்கள் கோவை எல்என்டி பைபாஸில் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பல்லாயிரக்கணக்கானோர் பல நூறு கோடி ரூபாயை அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சில ஆயிரங்களில் முதலீடு செய்தால் ரூ.200 முதல் வங்கிக்கணக்கிற்கு பணம் வரும் எனச் சொல்லி மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் லட்சங்களில் முதலீடு செய்தால் அதற்கேற்ப வங்கிக்கணக்கிற்கு வரும் பணம் உயரும் எனச் சொல்லி மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மோசடி நிறுவனத்திற்கு ஆதரவாக மக்களே போராட்டம் நடத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.
 
Edited by Mahendran