1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (15:17 IST)

தி.நகரில் கூடிய கூட்டம்: ஆடியை கண்டு ஆடிப்போன கொரோனா!

ஆடி தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கூடியதால் கொரோனா பீதி, சமூக இடைவெளி ஆகியவை தி நகரில் காற்றில் பறந்தது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஆனால் இந்த பயம் கொஞ்சம் கூட இல்லாமல் நேற்று ஆடி தள்ளுபடி துவங்கியதும் தி நகரில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். தி நகர் மட்டுமின்றி ரங்கநாதன் தெருவிலும் இதே நிலைதான். 
 
சமூக இடைவெளி காற்றில் பறந்த நிலையில் ஆடி தள்ளுபடிக்கு குவிந்த மக்களை கண்டு கொரோனாவே பயந்திருக்கும் போல...