வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (18:05 IST)

வாழ்வில் வெற்றி அடைய புத்தாண்டில் இவற்றை பழகுங்கள்....

வரும் புத்தாண்டு முதல் வாழ்வில் நீங்கள் தொட்ட விஷயமெல்லாம் வெற்றி அடைய இந்த ஐந்து விஷயங்களை பின்பற்ற பழகுங்கள்..

 
1.தினசரி அதிகாலை 4.30 அல்லது 5 மணிக்கு விழித்துக் கொள்ளும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றி வர வேண்டும். இதனால் மனம் மற்றும் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சிந்தனை திறன் அதிகரிக்கும்.
 
2.காலையில் சூரியக்கதிர்கள் நம் உடலின் மீது படுமாறு நடைபயிற்சி, ரன்னிங், ஜாக்கிங் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். இதனால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
 
3.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க, குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசி விளையாட கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படுவதோடு, மனதில் புத்துணர்வு உண்டாகும்.
4.அன்றாடம் நம் வாழ்வில் வீடு, வேலை என்று இல்லாமல், உலகத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள தினமும் செய்தித்தாள்களை வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய சமூக அறிவை அதிகப்படுத்தும்.
 
5.தினமும் ஒரு 10 நிமிடம் அன்றைய நாளில் நடந்த சம்பவங்கள் பற்றி குறிப்புகளை எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 
இவை அனைத்தையும் வரும் புத்தாண்டு முதல் நீங்கள் பின்பற்ற பழகினால் வரும் வருடம் உங்களுக்கு இனிமையான ஆண்டாக அமையும். வாசகர்கள் அனைவருக்கும் வரும் 2018 ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வெப்தூனியா சார்பில் வாழ்த்துக்கள்.