வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (16:00 IST)

சசிகலா தலைமையை விரும்பாத தொண்டர்கள்: சும்மா கிழி கிழின்னு கிழிக்றாங்க! (வீடியோ இணைப்பு)

சசிகலா தலைமையை விரும்பாத தொண்டர்கள்: சும்மா கிழி கிழின்னு கிழிக்றாங்க! (வீடியோ இணைப்பு)

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இறந்தார். அவரது மறைவையொட்டி அரசியலில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் அதிமுகவில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது.


 
 
130-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1.5 கோடி தொண்டர்களை கொண்டது அதிமுக. அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்தார் ஜெயலலிதா. அவர் தற்போது இறந்து விட்டதால் அவர் வகித்து வந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
 
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை போன்றோர் இந்த ரேஸில் உள்ளனர் என செய்திகள் வருகின்றனர். ஆனால் சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் வர உள்ளார் என அதிமுக வட்டாரத்திலும் ஊடகங்களிலும் செய்திகள் பரவுகின்றன.

 

நன்றி: RedPix
 
ஆனால் சசிகலாவுக்கு மக்கள் மத்தியிலும் பெரும்பாலான தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு இல்லை. அவருக்கு எதிர்மறையான பெயர் தான் உள்ளது. இந்நிலயில் அவர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக தொண்டர்களும், பொதுமக்களும் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சசிகலா பொதுச்செயலாளர் ஆவதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.