முதல்வர் ஜெயலலிதாவின் முரட்டு பக்தர்: அந்தரத்தில் தொங்கி வேண்டுதல்!
முதல்வர் ஜெயலலிதாவின் முரட்டு பக்தர்: அந்தரத்தில் தொங்கி வேண்டுதல்!
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக தொடர்கள் மத்தியில் இது சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது. லண்டனில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அவர் உடல்நிலை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்திகளாலும் அதிமுக தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் வர வேண்டும் என அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் அதிமுக தீவிர பக்தர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வேண்டியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வர வாழ்த்துக்கள்.