வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (21:01 IST)

ஈரோடு அருகே வயதான தம்பதி கொடூரக் கொலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோனார் காடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி. இவர் தனது மனைவி துளசிமணியுடன்  தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
 
இவர்களது மகன் வெங்கடேஷ் வெளியூர் சென்றிருந்ததால், தம்பதி மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில், மறுநாள் காலை அக்கம்பக்கத்தினர், வீடு திறந்திருப்பதையும் வீட்டுக்குள் இருந்த இருவரும் நீண்ட நேரமாக வெளியே வாராததையும் கண்டு சந்தேகம் அடைந்தனர்.
 
அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது தம்பதி இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டு, இரும்புக்கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்டும் இறந்து கிடந்தனர்.
 
தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாரளர் ராஜ் குமார் தலைமையிலான குழு, சடலங்களை மீட்டு பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 
கொல்லப்பட்ட துரைசாமிக்கு 25 ஏக்கர் நிலம், தென்னந்தோப்பு, ஆடு, மாடுகள் உள்ளன. இவருக்கு வெங்கடாச்சலம் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். 
 
பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக சண்டை, சச்சரவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து துரைசாமியின் குடும்பத்தினரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.