வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2017 (18:30 IST)

இனி ஓ.பி.எஸ். முதல்வராக முடியாது: ராஜினாமாவை திரும்ப பெற முடியாது

ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்று கூறியிருந்தாலும், அது சட்டப்படி சாத்தியமில்லை. தமிழக மக்களே விரும்பினாலும் இனி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக முடியாது.


 


கடந்த 5ஆம் தேதி தமிழக முதலவர் தனது ராஜினாமா கடிதம் கொடுத்தார். பின் அதிமுக பொதுச் செய்லாளர் சசிகலா அடுத்த தமிழக முதல்வரக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றி இரவு ஓ.பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். அவர் சசிகலாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் மக்கள் விரும்பினால் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்றார். ஆனால் அதற்கு சட்டப்படி சாத்தியமில்லை. இனி ஓ.பன்னிர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெற்று முதல்வராக முடியாது. முதல்வரின் ராஜினாமாவை ஏற்கனவே ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டார். ஓ.பன்னீர் செல்வத்தை இடைக்கால முதல்வராக தொடர உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் அவரது பெரும்பான்மையை நிரூபித்தால், அவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஆளூநர் ஒப்புதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.