வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (11:22 IST)

100 கோடி கடனுக்கு 2.85 கோடி ரூபாய் கமிஷன்… சிக்கிய ஊராட்சி மன்றத் தலைவர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாச்சிக்கோட்டை என்ற கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வம், கோவையில் மருத்துவமனை நடத்தும் மாதேஸ்வரன் என்பவருக்கு 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக சொல்லி அதற்கு கமிஷனாக 2.85 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி கடன் பெற்றுத்தரவில்லை.

இதையடுத்து மாதேஸ்வரன் தன்னுடைய கமிஷன் தொகையைத் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் பன்னிர்செல்வம். இந்நிலையில் மாதேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் பன்னீர் செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது போலிஸ்.