1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (17:51 IST)

சென்னையில் கனமழை ; பஞ்சாங்கம் சொல்வது என்ன?

மார்கழி அதாவது வருகிற டிசம்பர் மாதம் புயல் ஏற்பட்டு அதிக சேதம் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட  8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
 
 2015ம் ஆண்டு மழையில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்தும், வர்தா பயல் குறித்தும் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை குறித்து பஞ்சாங்கத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.


 

 
ஆனால், பஞ்சாங்கத்தில் மார்கழி மாதம் புயல் ஏற்பட்டு சேதாரம் அதிகமாக வாய்ப்புண்டு என கூறப்பட்டுள்ளது. எனவே, வருகிற டிசம்பர் மாதம் சென்னை, மீண்டும் ஒரு பெரு மழையை சந்திக்கும் என சிலர் நம்புகின்றனர். தற்போது பெய்து வரும் மழை பற்றி எந்த குறிப்பும் பஞ்சாங்கத்தில் இல்லை என்பதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர்.
 
மேலும், டிசம்பர் மாதம் புயல் ஏற்பட்டாலும், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என சில ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.