வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (16:51 IST)

இன்றும், நாளையும் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளத்துறை உத்தரவு

திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
 
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி – சி55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
 
நமது இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன்-3 விண்கலம், சந்திரனின் புதிய பரிமாணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் என  மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.,
 
இந்த நிலையில் விண்ணில் செலுத்தப்படவுள்ள  சந்திராயன் 3  மாதிரியை திருப்பதி  கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva