1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2016 (23:09 IST)

பழ.கருப்பையா உயிருக்கு ஆபத்து: அன்புமணி அதிர்ச்சி தகவல்

பழ.கருப்பையா உயிருக்கு ஆபத்து: அன்புமணி அதிர்ச்சி தகவல்

அதிமுக முன்னாள் எம்.எம்.ஏ. பழ.கருப்பையா உயிருக்கு ஆபத்து உள்ளதாக அன்புமணி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
 

 
சென்னை மாரத்தான் போட்டியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னை மாநகரை பெருமாநகராட்சியாக ஆட்சி முடியும் தருவாயில் தற்போது அறிவித்துள்ளதுதால் எந்த பயனும் அளிக்காது. இந்த அறிவிப்பு வரும் சட்ட மன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக முன்னாள் எம்.எம்.ஏ. பழ.கருப்பையா ஆளும் கட்சியைப் பற்றி பல உண்மைகளை வெளியிட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, அவரது  இல்லத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.