புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:35 IST)

என்னை சிறையிலேயே வைத்து அவமானப்படுத்த விரும்புகிறது சிபிஐ – ப சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வாதம் !

உச்சநீதிமன்றத்தில் நடந்த ப சிதம்பரத்தின் ஜாமீன் மீதான விசாரணையின் போது சிறையிலேயே வைத்து தன்னை அவமானப்படுத்த சிபிஐ விரும்புவதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் சிபிஐ காவல் முடிந்து தற்போது நீதிமன்றக் காவலில் இப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கே மற்ற சாதாரணக் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உணவுக் கூட மறுக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு 42 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அப்போது சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் ‘சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் சாட்சிகளைக் கலைத்ததாகவோ அனுகியதாகவோ எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது.சிபிஐ அமைப்பு எந்தவிதமான காரணமும் இன்றி, தொடர்ந்து சிறையிலேயே அடைத்துவைத்து அவமானப்படுத்த விரும்புகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.