வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (14:27 IST)

தேர்தலுக்கு முன் பிரதமரை அறிவிப்பது இல்லை – திருப்பரங்குன்றத்தில் ப சிதம்பரம் !

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையின் தமிழ் வடிவம் இன்று திருப்பரங்குன்றத்தில் வெளியானது.

காங்கிரஸ் தங்கள் தேர்தல் அறிக்கையைக் கடந்த 2 ஆம் தேதி வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்களாக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரித்தல், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்குதல், மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்புதல், விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் மற்றும்  தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்தல் போன்றவை இருந்தன.

காங்கிரஸின் இந்த தேர்தல் அறிக்கைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த தேர்தல் அறிக்கைக்குக் காங்கிரஸின் முன்னாள் நிதியமைச்சர் தலைவராக இருந்தார். இதையடுத்து இந்த தேர்தல் அறிக்கையை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் நடந்த விழா ஒன்றில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப சிதம்பரம் ‘இப்போதுள்ள ஜி.எஸ்.டி. மாற்றப்பட்டு எளிமையாக்கப்படும் எனவும் பெட்ரோல் டீசல் ஆகியவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்’ எனவும் அறிவித்தார். மேலும் காங்கிரஸில் தேர்தல் முடிவுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் பழக்கம் இல்லை எனவும் இந்த தேர்தலிலும் அந்த பழக்கமே தொடரும் எனவும் தெரிவித்தார்.