1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 மே 2021 (08:30 IST)

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய பேருந்து… சென்னையில் அறிமுகம்!

சென்னையில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி இப்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ எட்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. படுக்கைப் பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் சூழல் அதிகமாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் பேருந்துகளில் ஆக்ஸிஜன் அளிக்கும் வசதியை செய்துள்ளனர். இந்த பேருந்துகள் மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் நிலையில், ஆக்ஸிஜனுக்காக வரும் நோயாளிகள் இதில் ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.