திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (13:17 IST)

18 வயதில் பிரதமரை தேர்வு செய்யலாம், ஆனால் திருமணம் செய்யக் கூடாதா? ஒவைசி கேள்வி

18 வயதில் ஒரு பெண் பிரதமரை தேர்வு செய்ய வாக்களிக்கலாம், ஆனால் திருமணம் செய்யக்கூடாதா என ஓவைசி கேள்வி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா விரைவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
மத்திய அரசின் இந்த முடிவை திமுக உள்பட பல கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில் ஒவைசி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு பிரதமரை தேர்வு செய்ய 18 வயது பெண் ஓட்டு போடலாம், ஆனால் 18 வயதில் திருமணம் செய்யக்கூடாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
மேலும் ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.