குடும்ப ஆட்சியை ஒழிக்க கண்ணீர் விட்ட பன்னீர்!
குடும்ப ஆட்சியை ஒழிக்க கண்ணீர் விட்ட பன்னீர்!
29 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டமன்ற வரலாற்றில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவாரா, தோற்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
இதனையெட்டி நேற்று இரவு பன்னீர்செல்வம் தலைமையிலான அணி எம்எல்ஏக்களுக்கு கடைசியாக வேண்டுகோள் வைத்தனர். இதில் பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் முன்னிலையில் கண் கலங்கிவிட்டார். தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் ஜெயலலிதாவின் எண்ணம் என்ற பன்னீசெல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மனசாட்சிப்படி வாக்களித்தால் வெற்றி உறுதி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் நமக்கெல்லாம் முழு வடிவம் கொடுத்தவர்.
குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம். ஜெயலலிதாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் ஆட்சி அமைக்க அதிமுக எம்எல்ஏக்கள் துணைபோக கூடாது. நாளை நடைபெற உள்ள நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி சுயமாக சிந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குதான். தமிழகத்தில் குடும்ப ஆட்சி இருக்க கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம் என்று பன்னீர்செல்வம் கூறியபோது கண்கலங்கி நிறுத்தினார்.