1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (12:07 IST)

பெண்களுக்கு போன் செய்யும் ஓபிஎஸ் குரூப்: குண்டு தூக்கி போடும் குண்டு கல்யாணம்!

பெண்களுக்கு போன் செய்யும் ஓபிஎஸ் குரூப்: குண்டு தூக்கி போடும் குண்டு கல்யாணம்!

அதிமுக தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளர் நடிகர் குண்டு கல்யாணம் ஓபிஎஸ் அணியினர் மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.


 
 
ஓபிஎஸ் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளரை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். அவர்கள் மூலம் கட்சியின் உறுப்பினர் தகவல்களை திருடி அதில் உள்ள பெண் உறுப்பினர்களின் செல்போன் எண்களைத் தொடர்புகொண்டு தங்களின் ஆதரவாளர்கள் மூலம் அவர்களை தங்கள் அணிக்கு வரும்படி மிரட்டுகின்றார் என குற்றம் சாட்டியுள்ளார் குண்டு கல்யாணம்.
 
தன்னுடைய மகளுக்கும் இப்படி ஒரு கால் வந்ததாக குற்றம் சாட்டியுள்ள குண்டு கல்யாணம், போன் செய்பவர்கள் மற்றவர்களை பற்றி நாகூசும் வார்த்தைகளில் பேசுகின்றனர்.
 
அரசியலில் ஒரு பெண் தலைமையின் கீழ் நேற்றுவரை பணியாற்றிவிட்டு இன்று தரக்குறைவாக பெண்களை பேசுபவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்கமுடியும் என்று குண்டு தூக்கி போட்டுள்ளார் குண்டு கல்யாணம்.