திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:10 IST)

பிரதமரை சந்திக்க போகிறேன்: ஓபிஎஸ் அறிவிப்பு

OPS
தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் அவரை சந்திக்க இருக்கிறேன் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று மதுரையில் பேட்டியளித்தார். அப்போது தமிழகத்துக்கு வரும் பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு தமிழகத்திற்கு பிரதமர் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அப்படி வந்தால் கண்டிப்பாக அவரை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் கவர்னர் பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு தற்போது கவர்னர் குறித்து கூறுவது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார்
 
அதிமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்த இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
Edited by Mahendran