அதிமுக சீட்டுக்கு ரூ. 1 கோடி கேட்டாரா கே.பி. முனுசாமி? ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு
அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கேபி முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு சுமத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு கேபி முனுசாமி ஒரு கோடி கேட்டதாக கூறப்பட்டுள்ளது. பின் பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கேபி முனுசாமி கூறும் ஆடியோவும் அதில் உள்ளது.
இதை செய்தியாளர்களிடம் காண்பித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி முனுசாமி குறித்து தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளேன் என்றும் இந்த ஆடியோவுக்கு பதில் தராவிட்டால் வீடியோவையும் வெளியிடுவேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு கேபி முனுசாமி தரப்பு பதில் கூற மறுத்துவிட்டதாக தெரிகிறது.
Edited by Mahendran