திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 மார்ச் 2023 (17:36 IST)

அதிமுகவை விரைவில் மீட்போம், தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்: ஓபிஎஸ்

அதிமுகவை விரைவில் எடப்பாடி பழனிச்சாமி இடமிருந்து மீட்போம் என்றும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று அவர் சென்னை பசுமை சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இரட்டை இலையை பெற்றும் ஈரோடு கிழக்கில் அதிமுக 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்று தெரிவித்தார். எடப்பாடி தரப்பிடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் கண்டிப்பாக கட்சியை மீட்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
எடப்பாடி பழனிச்சாமி மீதான எதிர்ப்பு அலையை அவரே உருவாக்கி விட்டார் என்றும் தானும் தன்னை சுற்றி உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்
 
அதிமுகவிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும் என்பதே கட்சியின் விதி என்றும் விதியின்படி தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran