ஓபிஎஸ் வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்: தொடங்கியது அதிரடி அரசியல்!

ஓபிஎஸ் வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்: தொடங்கியது அதிரடி அரசியல்!


Caston| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (11:30 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்டாயத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக நேற்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பல்வேறு குற்றாட்டுகளை சசிகலா தரப்பின் மீது வைத்து நாட்டையே உலுக்கினார் ஓபிஎஸ்.

 

 
 
ஒட்டுமொத்த தமிழகமும் பன்னீர்செல்வத்தை உற்றுநோக்கி வருகிறது. அவருக்கான ஆதரவும் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் பன்னீர்செல்வம்.
 
இந்த சந்திப்பின் போது தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பேன் என கூறினார். தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் மக்களை நேரில் சந்தித்து பேசப்போவதாக கூறினார். கிராமம், கிராமமாக, வீடு வீடாக மக்களை சந்திப்பேன் என கூறியுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 
மேலும் ஆளுநர் சென்னை வந்ததும் அவரை போய் சந்திக்க உள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதற்கான காட்டாயம் ஏற்பட்டால் கண்டிப்பாக ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவேன் என கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :