சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டார் ஓபிஎஸ்!

சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டார் ஓபிஎஸ்!


Caston| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (14:41 IST)
ஒரே இரவில் தமிழகத்தின் ஹீரோவாக உருவெடுத்த முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2011-ஆம் ஆண்டு சசிகலா எழுதிய பழைய மன்னிப்பு கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ்.

 
 
சசிகலா முதல்வராக தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என ஓபிஎஸ் கூற தமிழகமே அதிர்ந்தது. அடுத்தடுத்து சசிகலா தரப்பு மீது குற்றச்சாட்டுகளை வைக்க தமிழகமே அவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.


 
 
இந்நிலையில் இன்று அதிரடியாக சசிகலா முன்னர் ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டார். அதில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை என சசிகலா குறிப்பிட்டு இருப்பது முக்கியமான ஒன்றாகும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :