1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (23:29 IST)

ஜெயலலிதா பெயரை ஆண் குழந்தைக்கு சூட்டிய ஓபிஎஸ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று முதல் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார்




 


இன்றைய பிரச்சாரத்தின்போது ஓபிஎஸ் இரு ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். ஜெயலலிதாவின் பெயரை நினைவு கூறும் வகையில் ஒரு குழந்தைக்கு ஜெயராமன் என்றும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் பெயரையும் நினைவு கூறும் வகையில் இன்னொரு குழந்தைக்கு ஜெய ராமச்சந்திரன் என்றும் பெயர் சூட்டி ஆசிர்வதித்தார்

இன்றைய நிலவரப்படி மதுசூதனன், டிடிவி தினகரன், மருதுகணேஷ் ஆகிய மூவரும் கடும்போட்டியில் உள்ளதாகவும், மூவருமே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் வெற்றியை கணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.