Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமா ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ரத்து - அபிராமி ராமநாதன் அதிரடி


Murugan| Last Updated: ஞாயிறு, 16 ஜூலை 2017 (15:05 IST)
சினிமா பார்ப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை, அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார்.

 

 
சமீபத்தில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி படி, ரூ.100க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. எனவே ரூ.120 டிக்கெட் விலை ரூ.153ஆக உயர்ந்தது. மேலும், இதை ஆன்லைனில் புக் செய்தால் ஒரு டிக்கெட்டிற்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ரூ.200 நெருங்கிகிறது. மேலும், பார்க்கிங், ஸ்னாக்ஸ் என ஒரு குடும்பத்தின் சினிமா பார்க்க வந்தால் ரூ.1000க்கும் மேல் செலவாகிறது. எனவே, ஜி.எஸ்.டி அறிவிப்பிற்கு பின், சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விட்டது. 
 
இதை கருத்தில் கொண்டு, அபிராமி ராமநாதன் தனது அபிராமி மாலில் உள்ள தியேட்டர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை ரத்து செய்து அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள மற்ற தியேட்டர்களுக்கு இது முன்மாதிரியாக இருந்தால் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
 
இவரின் இந்த நடவடிக்கைக்கு,  தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :