ஒருதலை காதல்; கல்லூரி மாணவியை வெட்டிக் கொலை செய்த இளைஞர்!

ஒருதலை காதல்; கல்லூரி மாணவியை வெட்டிக் கொலை செய்த இளைஞர்!


Caston| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:59 IST)
திருவாடனை அருகே ஒருதலையாக காதலித்து வந்த இளம்பெண் திருமணத்துக்கு மறுத்ததால் அந்த பெண்ணை இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
சிவகங்கையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார் தாரணி என்ற 19 வயது இளம்பெண். இவரை அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினரான குமார் என்ற 28 வயது இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
 
சென்னையில் தோல் பைகள் தைக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த குமார் அடிக்காடி சொந்த ஊருக்கு சென்ற தாரணியை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது விருப்பத்தை பெற்றோரிடம் கூறி தாரணியை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றார்.
 
ஆனால் தாரணியின் வீட்டில் இதற்கு சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் தரணியை தனியாக சந்தித்து தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார் குமார். ஆனால் தாரணி அதனை ஏற்கவில்லை. பின்னர் இதனை வீட்டில் சொல்ல இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை வந்து காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.
 
இந்நிலையில் தாரணி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் வீட்டில் நுழைந்த குமார் டிவியை சப்தமாக வைத்து விட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாரணியை சரமாரியாக வெட்டினார். இதனால் நிலைகுலைந்த தாரணி அங்கேயே உயிரிழந்தார்.
 
டிவியின் சப்தம் நீண்ட நேரம் நீடித்ததால் வீட்டில் நுழந்த அக்கம்பக்கத்தினர் தாரணியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற குமாரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :