1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (14:07 IST)

பாஜக கூட்டணியில் இணைகிறதா பார்வார்ட் பிளாக்.. மதுரையில் போட்டியிட திட்டம்..!

பாஜக கூட்டணியில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் தற்போது பார்வார்ட் பிளாக் கட்சி இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று கூட்டணிகள் மோத இருக்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி  தனியாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் கட்சி, ஜான்பாண்டியன் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் தற்போது பார்வார்ட் பிளாக் கட்சி இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பார்வர்ட் பிளாக் கட்சிக்கு மதுரை மக்களவை தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு பாஜகவுக்கு தென்னிந்திய பார்வார்ட் பிளாக் கட்சி கடிதம் எழுதி இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து பார்வார்ட் பிளாக் அந்த கடிதத்தை வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
எனவே பாஜக கூட்டணியில் பார்வார்ட் பிளாக் கட்சி இணைக்கப்படும் என்றும் அந்த கட்சிக்கு மதுரை தொகுதி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva