வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (11:53 IST)

ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு போன வழக்கு: மேலும் ஒருவர் கைது!

aiswarya rajini
ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருடியதாக ஏற்கனவே இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ஆபரணங்கள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள், வீட்டின் ஆவணங்கள், வைர நகைகள் உள்பட பல கைப்பற்றப்பட்டன 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் வீட்டில் நகை திருட்டு போன வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூரை சேர்ந்த நகை வியாபாரி வினால்க் சங்கர் நவாலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran