ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2020 (11:22 IST)

தீக்குளித்த பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்தவர் கைது: பெரும் பரபரப்பு

ஏதேனும் விபத்து அல்லது விபரீதம் நடந்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் குரூர மனப்பான்மை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது 
 
அந்த வகையில் கொடைக்கானலில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரத்தில் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அந்த நிகழ்வை வீடியோ எடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொடைக்கானலில் 32 வயது பெண் மாலதி என்பவர் கருத்துவேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அந்த பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும் தெரிய வந்ததும், தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து மாலதி நீதி கேட்க சென்றார். 
 
ஆனால் அவரது கணவரும் அவருடைய வீட்டாரும் அலட்சியமாகப் பேசி மாலதியை அடித்து விரட்டி விட்டனர் இதனால் மனமுடைந்த மாலதி, கணவரின் வீட்டு வாசலிலேயே தீக்குளித்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்ததோடு, அவரை காப்பாற்ற யாருமே முயற்சிக்கவில்லை. அதுமட்டுமன்றி மாலதி தீக்குளித்ததை ஒரு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்
 
தீக்குளித்த பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்தது குறித்து ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது