வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (21:18 IST)

OMR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்- மெட்ரோ இரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் கட்டுமான பணி காரணமாக OMR சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது: 
 
''சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர் தனது கட்டுமான பணியினை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ள உள்ளதால், பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 30.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
 
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி SRP சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் YMCA முன்பு புதிய "யு" திருப்பம் செய்து, SRP சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ''என்று தெரிவித்துள்ளது