செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (17:53 IST)

சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.3500: பகல்கொள்ளை அடிக்கும் ஆம்னி பேருந்துகள்!

Omni
சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ரூ.3500 ஆம்னி பேருந்துகளில் கட்டணம் என வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, மற்றும் சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இன்று சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் தங்கள் இஷ்டம்போல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்ல். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்ல 3500 ரூபாய் என்றும் சென்னையிலிருந்து மதுரை செல்ல 2500 ரூபாய் என்று கட்டணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது