வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 10 ஜூலை 2017 (18:12 IST)

போலிப் பத்திரை காட்டி ரூ.1.20 கோடி மோசடி செய்த முதிய தம்பதி

வங்கியில் போலி ஆவணத்தை அடமானம் வைத்து ரூ.1.20 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த இராஜமாணிக்கம்(67) மற்றும் அவரது மனைவி சவிதா(57) ஆகியோருக்கு கோவை மாநகரம் பகுதியில் 4 ஆயிரத்து 840 சதுரடியில் சொந்தமாக இடம் ஒன்று இருந்துள்ளது. இந்த இடத்தை அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவரிடம் விற்றுவிட்டனர். 
 
அந்த இடத்திற்கு போலி ஆவணத்தை தயார் செய்துள்ளனர். அதை திருப்பூர் கரூர் வைஸ்யா வங்கியில் அடமானம் வைத்து ரூ.1.20 கோடி கடன் பெற்றுள்ளனர். வங்கி ஆண்டு இறுதி தணிக்கையின் போது அதிகாரிகள் நிலத்திற்கான ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.
 
இதையடுத்து வங்கி அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர் அந்த தம்பதியை கைது செய்தனர்.