மதுரையில் மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடல்!
குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம் என்ற பெயரில் பல மோசடிகளை செய்து வரும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது
ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து காப்பகங்களும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரை பைக்கரா என்ற பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கிவந்த முதியோர் காப்பகம் ஒன்று மூடப்பட்டது
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்
மேலும் இதேபோல் தமிழகம் முழுவதிலுமுள்ள பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகம் மூடப்படும் என்றும் போதிய வசதி இல்லாமல் காப்பகங்கள் நடத்துவது சட்டப்படி தவறு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது