திருப்பத்தூரில் கால்வாயில் மிதந்த 500 ரூபாய் நோட்டுகள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்வாயில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மக்கள் தங்கள் கைவசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி போன்ற இடங்களில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதனால் கருப்புப் பணம் ஒழியும் என சொல்லப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம்தான் பலத்த அடி வாங்கியது.
இந்நிலையில் 1.5 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் திருப்பத்தூரில் கால்வாயில் மிதந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பழைய 500 ரூபாய் நோட்டு என்பதால் அதை யாரும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த நோட்டுகளை இங்கு வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.