1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (14:46 IST)

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த 7 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது ஒரு பீப்பாய் 39 டாலராக பெரிதும் சரிந்திருக்கிறது.
 
கடந்த 2008 ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய் 39 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 55.23 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 38.19 க்கும் விற்கப்பட்டது.
 
எனவே 2008 ல் பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு இப்பொழுதும் விற்கப்பட வேண்டும் என்பது தான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் மத்திய அரசு உயர்த்திய கலால் வரியை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்.
 
எனவே தற்போது விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு குறைந்த பட்சம் 10 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு குறைந்த பட்சம் 15 ரூபாயும் குறைத்து விற்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
 
அப்பொழுது நம் நாட்டில் நிலவும் விலைவாசி கட்டுப்படுத்தப்படும், மேலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். எனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.