வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (05:33 IST)

சென்னையில் வாடகை நிலைமை என்ன? தனியார் நிறுவனத்தின் ஆய்வு முடிவு

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாள் ஆக ஆக இடநெருக்கடி அதிகரித்து கொண்டே உள்ளது. மாநிலத்தின் மற்றும் நாட்டின் பல பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து தொழில் தொடங்கும் நிலைமை அதிகரித்து வருவதால் வீடு மற்றும் அலுவலகங்களுகான இடங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்னையில் அலுவல் வாடகை 6% அதிகரித்துள்ளதாக  நைட் ஃப்ராங் இந்தியா என்ற நிறுவனம் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. 



 
 
இந்த ஆய்வின்படி இந்த ஆண்டின் முதலாம் அரையாண்டில் சென்னையில் அலுவல் வாடகை 6 சதவிகிதம் வரை அதிகரித்துள்ள நிலைய்யில் ஓஎம்ஆர் பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக வாடகை 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 
அதேபோல் குடியிருப்பு பகுதிகளின் நிலை குறித்து பார்த்தோம் என்றால் சென்னையில் ரூ.50 லட்சத்துக்கும் குறைந்த விலையில் உள்ள புதிய குடியிருப்புகள் அதிகம் அறிமுகப்பட்டுள்ளதாகவும், ரூ.50 லட்சத்திற்கு அதிகமான குடியிருப்புகள் குறைந்த அளவே அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆய்வுமுடிவு தெரிவிக்கின்றது.
 
கடந்த 2016ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 39 சதவிகிதமாக இருந்த ரூ.50 லட்சத்துக்கும் கீழ் அறிமுகமான குடியிருப்புகள், 2017ஆம் ஆண்டில் 69% ஆக அதிகரித்துள்ளது
 
இவ்வாறு நைட் ஃப்ராங் இந்தியா, சென்னை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன் கூறியுள்ளார்.