செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (04:34 IST)

ஓபிஎஸ் உடன் 4 நாடுகளை சேர்ந்த தூதர்கள் சந்திப்பு

முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை  பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும் நேற்று மாலை சந்தித்தனர்



சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் அவர்களின் வீட்டிற்கு நேற்று நாட்டு தூதர் நினா இர்மெலி வாஸ்குன்லத்தி, ஐஸ்லாந்து நாட்டு தூதர் தொரிர் இஸ்பென், நார்வே நாட்டு தூதர் நில்ஸ் ரக்னார் கம்ஸ்வாக், சுவீடன் நாட்டு தூதர் ஹரால்ட் சான்ட்பெர்க் மற்றும் தூதரக அதிகாரிகளான பி.சிதம்பரம், ஆர்.ஸ்ரீதரன், சுரேஷ் மாதவன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக ஓபிஎஸ் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.


நான்கு நாட்டு தூதரக அதிகாரிகளுடன் ஓபிஎஸ் அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை குறித்து எடுத்து உரைத்ததாகவும், ஏழை மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் ஜெயலலிதா செயல்படுத்திய இலவச திட்டங்களையும் தூதர்கள் ஆச்சரியத்துடன் கேட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரே ஒரு டாலர் இருந்தால் அம்மா உணவகத்தில் ஒரு வாரத்துக்கு 3 வேளைகளும் சாப்பிடலாம் என்று 4 நாட்டு தூதரகர்களிடம் ஓபிஎஸ் விளக்கியதாகவும், அந்த செய்திக்குறிப்பில் உள்ளது.