Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (13:26 IST)

Widgets Magazine

தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

 


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் பிரதமரை நேரில் சென்று சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக கொரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளியிட்டுளள அறிக்கையில்,
 
தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.  இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.
 
9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும்  வகையில்  7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில்  உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.
 
ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதிச்செய்வோம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டாயம் காக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

சொகுசு கார் மீதான வரி ஏய்ப்பு வழக்கு ; நடராஜனுக்கு செக் வைத்த நீதிமன்றம்

இங்கிலாந்தில் இருந்து விலை உயர்ந்த காரை இறக்குமதி செய்து, அதற்கு குறைவாக வரி கட்டுவதற்காக ...

news

எலும்புக் கூடு கல்லறை: 2400 ஆண்டு கால பழமை!!

ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் ...

news

முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் செல்லும்: எதற்கு இந்த குழப்பம்?

ரெட் பஸ் ஆப் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் மூலம் பயணிகள் வழக்கம் போல் பயணிக்கலாம் என்று ...

news

புறக்கணிக்கப்பட்ட ஓ.பி.எஸ் : கண்டுகொள்ளாத சசிகலா- வீடியோ

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் பன்னீர் செல்வத்தை கண்டுகொள்ளாமல், ...

Widgets Magazine Widgets Magazine